''மின்னல் முரளி '' திரைப்படத்தைப் பாராட்டிய பாலிவுட் இயக்குநர்
டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான மின்னல் முரளி திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியா தாண்டி உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளது.
நெட்பிளிக்ஸில் கடந்த வாரத்தில் உலக டாப் 10 ல் மின்னல் முரளி இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸில் இதுவரை 59.9 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் 'மின்னல் முரளி' பட ஹீரோ டொவினோ தாமஸை பாராட்டியுள்ளார்.
அதில், மின்னல் முரளி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று இரவு எனக்குக் கிடைத்தது. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. சரியான முறையில் இப்படம் எடுக்கப்பட்டு, சிறந்த பொழுபோக்கு அம்சமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்களும் அற்புதமாக நடித்துள்ளீர்கள். வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்