திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (12:00 IST)

டிசம்பரில் வெளியாகிறது மின்னல் முரளி! – நெட்ப்ளிக்ஸ் அறிவிப்பு!

டொவினோ தாமஸ் நடித்த சூப்பர்ஹீரோ படமான மின்னல் முரளி டிசம்பரில் வெளியாவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

முதலில் திரையரங்கில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா நெருக்கடி காரணமாக படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸையொட்டி வெளியாக உள்ளதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.