திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (15:34 IST)

ஜெனிலியாவையும் நஸ்ரியாவையும் சேத்து வெச்ச மாதிரி... பாலிவுட் நடிகைக்கு ஒவர் பில்டப்?

நடிகர் ஹரிஷ் கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பின்னர் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. 
 
இந்த படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நடிகையை குறித்து இயக்குனர் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு, எனக்கு இந்த படத்திற்காக ஒரு புதிய முகம் தேவைப்பட்டது. 
 
நடிகை ரியா சக்ரபோர்த்தி நடித்த இந்தி படங்களை பார்த்திருக்கிறேன். ஒரே சமயம் கியூட்டாகவும் எனர்ஜியாகவும் அவரது நடிப்பிருக்கும். ரியாவை பார்க்கும் போது ஜெனிலியா, நஸ்ரியாவின் ஞாபகம் வருகிறது. எனது கதாபத்திரத்துக்கும் அதே மாதிரியான எனர்ஜி தேவைப்படுகிறது. அதனால் ரியா பொருத்தமாக இருப்பார் என நினைத்து கதை சொன்னேன். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார்.