1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2017 (19:33 IST)

எம்.ஜி.ஆர் வந்தா சரி, ரஜினி வந்தா தப்பா? – பாபி சிம்ஹா கேள்வி

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தா சரி, ரஜினி வந்தா தப்பா? என நடிகர் பாபி சிம்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். 


 

 
ஹீரோ, வில்லன் என எந்த பாரபட்சமும் பார்க்காமல், வருகிற வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு வஞ்சனையில்லாமல் நடிப்பவர் பாபி சிம்ஹா. இவர் வில்லனாக நடித்த ‘கருப்பன்’ படம் சமீபத்தில் ரிலீஸானது. பாபி ஹீரோவாக நடித்த ‘திருட்டுப்பயலே 2’, விரைவில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி அவரிடம் கேட்டால், ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? ரஜினி மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எம்.ஜி.ஆர் போன்றவர்கள் சினிமாவில் இருந்துதானே அரசியலுக்கு வந்தார்கள்? மக்களிடம் அறிமுகமாகவதற்கு, சினிமா விசிட்டிங் கார்டாக உள்ளது. அந்த விசிட்டிங் கார்டு ரஜினியிடம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் வரவேற்பேன் என தெரிவித்துள்ளார் பாபி சிம்ஹா.