செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam (Murugan)
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (18:36 IST)

இமயமலைக்குச் செல்லும் ரஜினி…மறுபடியும் முதல்ல இருந்தா?

விரைவில் இமயமலைக்குச் சென்று பாபாவை தரிசிக்க உள்ளார் ரஜினி என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 

 
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் ரஜினி என்பது எல்லோருக்கும் தெரியும். மனது சரியில்லாத சமயங்களில் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு இமயமலைக்கு கிளம்பிவிடுவார். செல்போன் கூட இல்லாமல்/பயன்படுத்தாமல் செல்லும் ரஜினி, அவராக வீட்டுக்குப் போன் செய்தால்தான் உண்டு. சமயங்களில் பல நாட்கள் கூட அங்கேயே தங்கி பாபாவைத் தரிசித்துக் கொண்டே இருப்பார்.
 
அரசியலில் இறங்குவதை இதுநாள்வரை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த ரஜினிக்கு, இப்போது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத கமலின் திடீர் அரசியல் பிரவேசம்தான் அது. இதனால், பல வருடங்களாக போக்கு காட்டிக் கொண்டிருக்கும் ரஜினியும் அரசியலுக்கு வந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம். இந்த நெருக்கடியில் இருந்து மீள, ‘காலா’ ஷூட்டிங் முடிந்ததும் இமயமலைக்குப் பயணம் போகிறாராம் ரஜினி.