புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (13:59 IST)

பிரபாஸ் பிறந்த நாளில் ரிலீஸாகும் பில்லா4K

தமிழ்சினிமாவில் அஜித்தின் பில்லா படத்தின் வெற்றிக்குப் பின், அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு,  2007 ஆம் ஆண்டு பில்லா வெளியானது. இப்படத்தின் யுவன் இசையும் பரவலாகப் பேசப்பட்டது.

இப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு சலீக் ஜாவ் கதை எழுத, மகெர் ரமேஷ் இயக்கினார்.. மணிசர்மா இசையமைத்திருந்தார். இப்படம் அப்போது, ரூ.26 கோடி பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து, பிரபாஸில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

அதன்பின், ராஜமெளவி இயக்கத்தில், பிரபாஸ் நடித்த, பாகுபலி 1- 2015 ஆண்டிலும், பாகுபலி-2  2017 ஆண்டிலும் வெளியாகி பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியது.
இந்த  நிலையில்,வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பிரபாஸின் பிறந்த  நாளை முன்னிட்டு, அவர் நடித்த பில்லா படம் தெலுங்கு மா நிலங்கள் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.