புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:50 IST)

பிரபாஸ் - பிரஷாந்த் நீல்ஸின் சலார் படத்தின் முக்கிய அப்டேட் !

பிரபாஸ்
நடிகர் பிரபாஷ் நடித்து வரும் சலார் படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் பாகுபலி.1-2 இப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் குவித்து. இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இப்படங்களுக்கு அடுத்து, நடிகர் பிரபாஸ் நடித்த, ராதேஸ்யாம், ஷாகோ போன்ற படங்களில் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்த நிலையில் தற்போது, ஆதி புரூஸ், கே.ஜி;.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

எனவே, கே.ஜி.எஃப் பட ஹீரோ யாஷை சலார் படத்தில்  கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 75 வது சுதந்திர தின விழாவின் போது, ‘’சலார்’’ படத்தின்  போஸ்டர் வெளியாகவுள்ளதாக  சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகிறது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில்,வம்ஷி சேகர், இந்தத் தகவலை உறுதிப் படுத்தியுள்ளார்.

இப்படத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள் வெளியாகும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் பிரபாஸ் கேரியரில் முக்கிய படமாக அமையும் என்றும் இது வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.