புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:31 IST)

அம்பலமான பிக்பாஸ் யாஷிகாவின் உண்மை முகம்

ஹர ஹர மகாதேவகி படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன யாஷிகா "இருட்டு அறையில் முரட்டுக் குத்து" படத்தில் நடித்து  பிரபலமாகினார். 
படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் போல்டான பெண்ணாக இருக்கும் யாஷிகா மாடலாக இருந்து பிறகு தன்னை அறியப்படும் நடிகையாக அடையாளப்படுத்தினர்.
 
பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2-ல் பங்கேற்று சக போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவந்தார்.குறிப்பாக டாஸ்க்குகளை வெறித்தனமாக விளையாடி வெற்றியடையும் திறமைமிக்கவர். இருந்தாலும் ஐஸ்வர்யா உடன்  நெருங்கிய நட்பு கொண்டிருந்ததால் மக்களுக்கு வெறுப்யு உண்டானது. இதனால் இவர் கடைசி நேரத்தில் வெளிற்றப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில்  பேசிய யாஷிகா, சிறுவயதில் இருந்தே என் பெற்றோர் என்னை  தைரியமான பெண்ணாக வளர்த்தனர் என்றும் நானே  சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார்கள் என்றும் அதனால் தான் என்னால் தெளிவான சில முடிவுகளை எடுக்க முடிந்தது என தெரிவித்துள்ளார். 
 
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தினால் என்னை தவறான காணோட்டத்திலே பார்த்த மக்கள் ,பிக் பாசில் பங்கேற்ற பிறகு சுயமாக சிந்துக்கும் ஒரு தைரியமான பெண்ணாக என்னை பார்த்தனர். இதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. என்னை வெற்றி அடைய செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார். 
 
சிறுவயதில் இருந்தே தைரியமான பெண்ணாக வலம் வந்த நான் பேய் உள்ளிட்ட எதற்கும் பயப்பட்டதில்லை.  ஆனால், பிக் பாஸ் குரலை கேட்டால் மட்டும் நான் அவ்வளவு பயப்படுவேன் . இருந்தாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அந்த குரலை ரொம்பவும் மிஸ் பண்றேன் என யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.