வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (20:47 IST)

பிக்பாஸ் குடும்பத்துடன் இணைந்த சிம்பு

செக்க சிவந்த வானம் வெற்றி படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு அத்தாரின்டிக்கி தாரேதி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். 
 
இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரினா தெரசா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். 
 
சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும்,  பிக் பாஸ் நிகழ்சியை தவறாமல் பார்த்து வருபவர். இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ரிதிவிகாவையும் நேற்று சிம்பு சந்தித்துள்ளார். 
 
ஜார்ஜியாவில் இருந்து இந்தியா திரும்பிய சிம்பு நேற்று பிக் பாஸில் பங்கேற்ற ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, ஹரிஷ் கல்யாண், மகத் மற்றும் மகத்தின் காதலி பிராச்சி ஆகியோருடன் சேர்த்து செக்க சிவந்த வானம் படத்தை பார்த்துள்ளார்.