1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (18:06 IST)

பிக்பாஸ் இன்னும் தொடங்கவே இல்லை, அதுக்குல்ல ஆர்மியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது
 
இன்று 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களம் இறங்கப் போவதாகவும் வைல்ட்கார்டில் இரண்டு போட்டியாளர்கள் களம் இறங்கப் போவதாகவும் மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன எளிதில் அதற்குள் ஒரு சில போட்டியாளர்களுக்கு ஆர்மிகள் ஆரம்பித்து நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
குறிப்பாக பவானி ரெட்டி, நதியா சிங், அபிஷேக் ராஜா, உள்பட ஒரு சிலருக்கு ஏற்கனவே ரசிகர்களால் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது