1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 டிசம்பர் 2020 (07:50 IST)

ஆரியின் அடுத்த பட டைட்டில்: பிக்பாஸ் வீட்டில் வெளியீடு!

ஆரியின் அடுத்த பட டைட்டில்: பிக்பாஸ் வீட்டில் வெளியீடு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி, ஆரம்பம் முதலே நேர்மையாளராகவும், தனித்தன்மை உடையவராகவும், எந்த அணியிலும் சேராமல் யாருக்கும் ஆதரவும் கொடுக்காமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் நடுநிலையுடன் ஆடி வருவதாக சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கமல்ஹாசனே பலமுறை அவரை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடித்த 12வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஷங்கர் தயாரித்த ரெட்டைசுழி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆரி, அதன் பிறகு நயன்தாரா நடித்த மாயா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்
 
இந்த நிலையில் ஆரியின் 12வது திரைப்படத்தின் டைட்டில் ’பகவான்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இலுமினாட்டிகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டைட்டில் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
இந்த படம் குறித்து ஆரி கூறியபோது இது ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என்றும் நம்முடைய வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வையும் இந்த படத்தில் வரும் காட்சிகள் நமக்கு ஒத்துப்போகும் என்றும் அவர் கூறினார்
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரியோ நடித்த ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தின் வீடியோ பாடல் வெளியான நிலையில் ஆரி நடித்துள்ள ‘பகவான்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது