பாலாஜியை நேரடியாக தாக்கும் நித்யா: 2வது ப்ரோமோ வீடியோ
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜியும், அவரின் மனைவி நித்யாவும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட துவங்கியுள்ளனர். குறிப்பாக பாலாஜி நித்யாவை அசிங்கமாக திட்டுகிறார்.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், நித்யா ஒரு ஆண் தனது மனைவிக்காக கூட குடிப்பழகத்தை விடமாட்டார் என பாலாஜியை நேரடியாக தாக்கி கூறுகிறார். இதையடுத்து, பாலாஜி, நித்யாவை கொடுத்த தலைப்பிற்கு ஏற்றவாறு பேசவும் என கூறுகிறார்.