திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (09:36 IST)

ஒரு ரெண்டு நாள் வாயை மூடிக்கிடு இரு: வைஷ்ணவியை அடக்கும் ரம்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெங்காயம் என்றால் இந்த வாரம் வேலைக்காரி டாஸ்க் பிரதானமாக உள்ளது. இதுதான் வாய்ப்பு என்று பெண் போட்டியாளர்களை ஆண் போட்டியாளர்கள் இந்த டாஸ்க் மூலம் வறுத்தெடுக்க, மும்தாஜ், மமதி உள்பட பெண் போட்டியாளர்கள் கடுப்பில் உள்ளனர். இதற்கு பழிவாங்க அவர்கள் காத்திருப்பதாக ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜிக்கும் வைஷ்ணவிக்கும் நேரடியாகவே மோதல் வெடிக்கின்றது. உங்க வேலையை பாத்துகிட்டு போங்க என பாலாஜி வெடிக்க, வைஷ்ணவி, பாலாஜி குறித்து மகத்திடம் குற்றம் சொல்லி வருகிறார். பாலாஜி அப்படித்தான் என்று எனக்கு தெரியும் என்று கோபத்துடன் கூறுகிறார்.
 
இந்த நிலையில் ஒரு ரெண்டு நாள் வாயை முடிக்கிட்டு இரு என்று ரம்யா, வைஷ்ணவிக்கு அட்வைஸ் செய்கிறார். ஆனால் வைஷ்ணவியின் வாய் சும்மா இருக்காதே. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆக்ரோஷமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.