ஜிகு ஜிகு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் ரித்விகா!
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.
சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் தற்போது படு மாடர்ன் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகு ஜிகுன்னு மின்னும் மாடர்ன் உடையில் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் நீங்க மாடர்ன் உடை அணிந்தாலும் ட்ரடிஷனல் உடை அணிந்தாலும் இரண்டிலும் செமயா இருக்கீங்க என கூறியுள்ளார். ஆனால், உண்மையில் ரித்விகாவிற்கு மாடர்ன் ட்ரஸ் விட ட்ரடிஷனல் உடை தான் பொருத்தமாக இருக்கிறது.