வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (17:05 IST)

சவடாலா நின்னு சறுக்கி விழுந்துடாதீங்க - ஸ்டைலா போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.
 
இந்நிலையில் தற்போது பாச பிடித்த படிக்கெட்டில் ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "  என்னைப் பற்றி அதிகம் கற்றுக் கொண்ட ஒரு வருடத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கு விடைபெறுகிறேன், என் கனவுகள், என் கலை,  என் இதயம் மற்றும் என் நம்பிக்கை. அதிக வளைவு பந்துகள் மற்றும் அதிக பாடங்கள் மற்றும் அதிக ஆசீர்வாதங்களுக்காக காத்திருக்க முடியாது .. போகலாம் !!! 
 
உங்கள் அனைவரையும் பளபளப்பையும் அன்பையும் வெளிச்சத்தையும் அனுப்புகிறது !!! உங்களுக்கு அன்பையும் தயவையும் காட்டியவர்களிடம் நன்றி சொல்ல ஒரு நொடி எடுத்து, நீங்களே நன்றி சொல்லுங்கள், பிடித்துக்கொள்வதற்கும் பெறுவதற்கும் பின்னால் உங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என 2020ம் ஆண்டின் அனுபவத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.