செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (17:15 IST)

ஆத்துகாரருடன் அந்தரத்தில் பறந்து ஆட்டம் போடும் காஜல் அகர்வால்!

கணவருடன் குஷியான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால் 
 
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கௌதம் என்ற தொழிலதிபருக்கும் இடையே திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த திருமணம் அவரது மும்பை வீட்டில் மிகவும் எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் நடைபெற்றது. 

இதையடுத்து காஜல அகர்வால் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்று வந்தார். அதன் பின்னர் இப்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் காஜல் கணவருடன் சேர்ந்து அடிக்கடி அவுட்டிங் சென்று ஜாலியாக இருந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். தற்போது கணவர் கெளதம் கிச்சுலு உடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்து குஷியாக விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.