வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 22 பிப்ரவரி 2020 (10:12 IST)

கழுத்தில் தாலி... நெற்றியில் குங்குமம்... பிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்...!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார். 
 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் இதற்கான ஒரே வழி திருமணம் செய்வது கொள்வது தான் என்று முடிவெடுத்து  தனது நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படமொன்றை பதிவிட்டு Wife of Mr. Actor படத்தின் ஷூட்டிங் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா ஷட்டிங்ன்னு பொய் சொல்லிரியா என கிண்டலடித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wife of Mr. Actor