புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (14:29 IST)

குழாய் அடி சண்டை ஆரம்பம்... தாங்கமுடியாமல் கதறிய தாமரை!

பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் வீட்டில் நாணயம் கடத்தல் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. வீட்டில் ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டு அதைப் பாதுகாப்பது ஒரு குழுவின் கடமை என்றும், மற்றொரு குழு அதைத் திருடி கேமரா முன்பு காட்ட வேண்டும் என்பதே போட்டி.
 
இதில் அதிகமான நாணயங்கள் கைப்பற்றியவர்கள் இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் தெரிவித்ததையடுத்து அதன் வேலைகளால் போட்டியாளர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான ல் ப்ரோமோவில் தாமரை குளிக்க சென்ற நேரம் பார்த்து அவரது நாணயத்தை ஸ்ருதி திருடிவிட்டார். அதை பவானி சொல்லி தான் ஸ்ருதி திருடியதாக தாமரை அவரை திட்டினார். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது. 
 
அதையடுத்து தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், தாமரை வீட்டில் இருக்கும் எல்லா போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்து ஒப்பாரி வைத்து அழுகிறார். தாமரை செல்வி நாணயத்தை எடுத்தால் ஒப்பாரி வைக்கும் என்று நேற்று அக்ஷரா சொன்னது சரியாபோச்சு.