புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (08:53 IST)

பிக்பாஸ் நமீதா கலவரம் செய்ததால் வெளியேற்றப்பட்டாரா: வேகமாக பரவும் வதந்தி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
நமீதா தனது கதையை உருக்கமாக கண்ணீருடன் கூறியபோது அவருக்கு ஆதரவு குவிந்தது என்பதும் அவர் 100 நாட்கள் வரை இந்த வீட்டில் இருப்பார் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் அவர் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமீதா மற்றும் தாமரை செல்வி இடையே நடந்த பிரச்சனையின் போது நமீதா மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் தூக்கி எறிந்ததாகவும் அவரை சமாதானப்படுத்த பிக்பாஸ் முயன்றும் முடியாததால் அவர் ரெட்-கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன
 
ஆனால் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் உடல்நல பிரச்சனை காரணமாகவே நமீதா வெளியேறியுள்ளார் என்றும் மீண்டும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.