புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 23 அக்டோபர் 2021 (23:57 IST)

தாமரை மணிமாலை கொண்டு ஜெபிப்பதால் வறுமை நீங்குமா...?

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து இருக்கும். அதாவது சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து இருக்கும். திடீரென்று வறுமையில் தள்ளப்பட்டு இருப்பார்கள். அதாவது  ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர நிலைமைக்கு வந்து இருப்பார்கள்.
 
 
ஒரு சிலருக்கு நடுத்தர வாழ்க்கை கூட இல்லாமல், மோசமான நிலைமைக்கு போய், வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். 
 
இப்படிப்பட்டவர்கள் முடிந்தவரை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சுக்ரஹோரையில் ஆரம்பித்து 90 நாட்கள் செய்யலாம் இரும்பு கலக்காத 90 நாணயங்களை எடுத்துக் கொள்ளவும். தினமும் ஒரு நாணயம் எடுத்து அதை மஞ்சள் கலந்த நீரால் கழுவி விளக்கின் பாதத்தில் வைத்து ஜபம் முடிந்த பின் விளக்கைக்  குளிரவைத்து அல்லது விளக்கு தானாகக் குளிர்ந்தபின் அந்த நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் வைத்துக்கொள்ளவும்.
 
இதுபோல் தினமும் செய்து 90 ஆவது நாள் அந்த மஞ்சள் பட்டுத்துணியை முடிச்சுப் போட்டுப் பணம் வைக்கும் பீரோ, கல்லாவில் வைத்துக்கொள்ளவும். மஞ்சள்  பட்டுத்துணியில் முதல் நாள் மட்டும் 4 மூலை மற்றும் நடுவில் கொஞ்சம் வாசனைத்திரவியம் தடவவும் அல்லது பன்னீர் தெளிக்கவும். 
 
ஜப காலத்தில் கருப்பு நிறம் தவிர்த்து மஞ்சள்,பொன்னிறம் அல்லது தூய வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும். மஞ்சள், பொன்னிறம் அல்லது தூய  வெண்ணிறத் துணி மேல் அமர்ந்து ஜெபிக்கச் சிறந்த பலன் கிடைக்கும்.
 
தினம் 108 தடவைக்குக் குறையாமல் வடக்கு அல்லது மேற்கு நோக்கி ஜபித்து வர வறுமை நீங்கி வளமான வாழ்வு உண்டாகும். தாமரை மணி மாலையால்  ஜெபிக்கச் சிறந்த பலன் கிடைக்கும்.
 
மந்திரம்:
 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் 
தாரித்ர்ய வினாசகி
ஜகத் ப்ரசூத்யை நமஹ.