1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (10:46 IST)

அன்பு ஜெயிக்கும்னு நம்புங்க... மீண்டும் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிந்துவிடும். இறுதி  கட்டத்தை நெருங்கியுள்ளதால் நிகழ்ச்சி கொஞ்சம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று வீட்டில் இருந்து ஷிவானி வெளியேற்றப்பட்டார். இதில் சோம் மற்றும் ஆரி பைனலுக்கு சென்றுள்ளனர். 
 
இந்த முறை நிச்சயம் ஆரி தான் வெற்றியாளர் என மக்கள் எப்போதோ கணித்துவிட்டனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட அர்ச்சனா , நிஷா , ஜித்தன் ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். 
 
இந்த கூட்டம் வெளியில் போனதற்கு அப்புறம் தான் பிக்பாஸ் சிறப்பாக இருந்தது. இப்போது மீண்டும் இந்த அன்பு கேங் உள்ளே வந்திருப்பதால் என்னவெல்லாம் நடக்கபோகுதோ என எல்லோரும் முணுமுணுத்து வருகின்றனர். இருந்தும் ஆடியன்ஸ் சனம் மற்றும் சுரேஷுன் வருகைக்காக காத்திருக்கின்றனர்.  ஜித்தன் ரமேஷ் வந்த உடனே படுத்து அவர் வேலைய ஆரம்பிச்சுடார். நிஷா வந்து ஆரியை ய புடிக்குற புடி பார்த்தால்  வெளிய அடி கொஞ்சம் ஓவெரோ...? 
 
நிமிஷத்துக்கு ஒரு ரியாக்ஷன் குடுக்கும் ரியோ இனி ஆக்ஷனில் இறங்கிவிடுவார்.  தொன்னூற்றி எட்டு நாட்கள் அறுபது காமெராக்கள் இருந்தும் மற்ற போட்டியாளர்களை நல்லவனா காண்பிக்கவும் முடியல. அதே தொன்னூற்றி எட்டு நாட்கள் அறுபது காமரா இருந்தும் ஒருவனை கெட்டவனா காட்டவும் முடியலைன்னா அவர்தான் ஆரி. அன்பு கூட்டத்தால் இப்போ மட்டும் இல்ல எப்பவும் ஒன்னும் பண்ணமுடியாது.