சண்டை கோழிகளை சேர்த்து வச்ச கமல்... நல்லா இருக்கு இந்த கிளைமேக்ஸ்!

Papiksha Joseph| Last Updated: சனி, 9 ஜனவரி 2021 (19:57 IST)

பிக்பாஸ் 3 சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது இந்த சீசன் முடிவதற்கு. அதற்குள் பல கடுமையான டாஸ்க் கொடுக்கப்படும்.
இந்த சீசன் முழுக்க தாங்கி சென்றது ஆரி மற்றும் பாலா தான். அவர்கள் இருவரின் சண்டை இல்லையென்றால் ரொம்ப மொக்கையா இருந்திருக்கும். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் நடிகர் கமல் ஹாசன் , என்ன செஞ்சுட்டாங்க இவங்க...? என்ன தகுதி இருக்கு இவங்க இங்க வர...? எதன் அடிப்படையில் இவர்களுக்கு ஒட்டு போடுவாங்க என்கிற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணருகிறேன்.
அதற்கான பதிலை வீட்டிற்குள் இருப்பவர்கள் சொல்லியிருக்காங்க... அதற்குள் இங்கிருந்து ஒருவர் வெளியேறவேண்டும். அதுயார்? என செம சஸ்பென்ஸ் கொடுத்தார் கமல். இந்த ப்ரோமவுக்கு ஆடியன்ஸ் " அது ரம்யாவாக தான் இருக்கவேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

அதையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்கில் சோம் சேகர் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனல் ரவுண்டிற்கு சென்றுள்ளார். அப்போ நிச்சயம் ஆரி தான் வெற்றியாளர் என மக்கள் உறுதியாக கணித்துவிட்டனர். சோம் ஃபைனலுக்கு சந்தோஷம். ஆனால், ஏனோ அவர் மனதில் பதியவில்லை. ஏனென்றால் அவர் மக்கள் முன் எந்த உணர்ச்சிகளையும் ரொம்ப பகிரவில்லை.
இந்நிலையில் தற்ப்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வீட்டில் சண்டையிட்டு கொண்டிருந்த பாலா மற்றும் ஆரி இருவரையும் சேர்ந்து வைக்க ரகசியமாக பேசியதை ஒரு குறும்படமாக போட்டு மக்கள் முன் நல்லவர்களாக காட்டி விட்டார் கமல்.
இதை பார்க்க, மங்காத்தா படத்தில் க்ளைமாக்சில் தான் தெரியும் அஜித்தும் அர்ஜுனும் ப்ரண்ட்ஸ்னு...அதே மாதிரி இருக்கு இதுவும். இருந்தாலும், நீங்கள் இப்பொழுது பார்த்து கொண்டிருப்பது சனிக்கிழமை நெருங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அம்பியாக மாறிய பாலாஜி.


இதில் மேலும் படிக்கவும் :