செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:58 IST)

பிக்பாஸ் 4 சீசனில் முதல் உருப்படியான ப்ரோமோ இது தான் - அப்படி என்ன ஸ்பெஷன்னு பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதேனும் ஒரு போட்டியாளர் மக்கள் மனதை வென்ற நபராக பார்க்கப்படுவார். அந்தவகையில் இந்த 4வது சீசனில் ஆரம்பம் முதலே நடிகர் ஆரி ஒட்டுமொத்த மக்கள் மனதையும் வென்று டைட்டில் வெல்வதற்காக தகுதியான போட்டியாளராக பார்க்கப்பட்டு வருகிறார்.
 
டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான பல புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று வாக்கியத்துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை ஹவுஸ்மேட்ஸ் ஒருத்தரை ஒருத்தர் பற்றி கருத்து கூறவேண்டும். இந்த டாஸ்கில் பெரும்பாலும் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஆரியை குறித்து தான் குறை கூறிக்கொண்டிருந்தனர்.
 
அதையெல்லாம் ஆரி குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டு அமைதி காத்தார். இன்று வெளியாகின முதல் ப்ரோமோவில் ஆரி வாக்கியத்துண்டை ரம்யாவிற்கு சமர்ப்பிக்க அதை அவர் குறுக்கிட்டு கருத்து தெரிவித்ததால் கோபமான ஆரி அவரை திட்டி நான் பேசும்போது எதுவும் பேசாதீர் என கண்டித்தார். இரண்டாவது ப்ரோமோவில் எப்போதும் ஆரியுடன் மோதிக்கொண்ட பாலா அவருக்கு ஆதரவாக பேசி ரம்யாவின் தவறை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். 
 
இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் தங்களது சக்திக்கு மீறி பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கை கடினப்பட்டு கண்கலங்கி செய்தனர். இந்த டாஸ்க் மட்டும் தான் இந்த சீசனில் கொடுக்கப்பட்ட டஃப் டாஸ்க் என்று ஆடியன்ஸ் கூறி வருவதோடு நிச்சயம் இன்றைய எபிசோட் பார்த்தே ஆக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.