வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (15:33 IST)

பீரிஸ் டாஸ்கில் பாலாஜியை பார்க்கா யாரு வந்திருக்காங்கனு பாருங்க!

பிக்பாஸ் வீடு இந்த வாரம் மிகுந்த சுவாரஸ்யமாக போகும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரீஸ் டாஸ்க் வந்துவிட்டது. இதில் அவரவர் குடும்பத்தை சேர்ந்த நபர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை அவர்களுக்கே புரிய வைக்கும் தருணம் தான் இது.
 
கடந்த சீசனில் இந்த டாஸ்கில் லாஸ்லியாவின் தந்தை கவின் உடனான காதலை கண்டித்து எதிர்த்தார். அது நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்திற்கு பெரும் பங்கு வகித்தது. அந்தவகையில் தற்போது ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து பாலாவுடன் நீ செய்யும் ரொமான்ஸ் வெளியில் யாருக்கும் தெரியாது என நினைந்து கொண்டிருக்கிறாயா...? எதுக்கு இங்க வந்த என்ன வேலை இதெல்லாம் என கேட்டு கடுமையாக கண்டிக்கிறார்.
 
ஷிவானிக்கு முகம் ஈ ஆடல. ஷிவானியின் அம்மா பேசியதை கேட்டதும் நம்மில் பலருக்கும் லாஸ்லியாவின் தந்தை தான் நியாபகத்திற்கு வந்தார். அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பாலா கண்கலங்கி அழுதார். (அதாவது பார்ப்பதற்கு அப்படியே போன சீசன் கவின் மாதிரி) என்னால தானே
எல்லாம் அவங்க அம்மா என்கிட்ட ஏதாச்சும் கேட்டு கண்டித்திருந்தாங்கன்னா கூட பரவாயில்ல என ரம்யாவிடம் கூறி அழுகிறார். தம்பி பாலா... இதெல்லாம் நாங்க போன சீசன்லயே பார்த்துட்டோம் ஏதாவது புதுசா பண்ணுங்க.
 
இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது  ப்ரோமோவில் பாலாவுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் அவரது நண்பரை அனுப்பி லைட்டா ஷாக் கொடுத்தனர். ஆனால், பாலா மற்றவர்களை  போல நண்பனை கட்டிப்பிடித்தோ இல்லை கதறி அழுதோ வரவேற்கவில்லை. அதுதான் நண்பர்களுக்குள் இருக்கும் யதார்த்தம் என்றாலும் அதுவும் funny'யாகவே இருந்தது. பாலாவின் நண்பர் அவரிடம், நீ எடுக்கும் எல்லா முடிவும் சரியா இருக்கு என்று சொன்னது தான் செம காமெடி. பாலா தான் இப்படி என்றால் அவரது நண்பரும் அவரை போலவே தான் இருக்கிறார். செப்பாஹ்....