வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (13:35 IST)

உன்ன மாதிரி இடுப்ப காட்டாமல் அந்த மனுஷன் உள்ளத்தை காட்டுறாரு!

பிக்பாஸ் வீட்டில் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை வந்தாலே நாமினேஷன் விறு விறுப்பாக நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமடைய செய்யும். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் ஒவ்வொரு சீசனிலும் மக்களால் அதிகம் விரும்பக்கூடிய நபர் யாரோ அவரை தான் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதிகம் நாமினேட் செய்வார்கள். 
 
அந்த வகையில் இந்த முறை நடிகர் ஆரி சிக்கியுள்ளார். ஆம், இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் வீட்டின் தலைவராக இருக்கும் ஆரியை நீங்கள் நாமினேட் செய்யமுடியாது என்று பிக்பஸ் அறிவித்ததும் பாலா மற்றும் ரம்யா மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி அஜீத் மற்றும் கேபியை அதிகம் பேர் நாமினேட் செய்தனர்.  அத்துடன் ஷிவானியும் நாமினேஷன் லிஸ்டில் வசமாகி சிக்கியுள்ளார். 
 
ஆஜீத் ஆரம்பத்தில் இருந்தே ஃபிரீ பாஸ் , கேப்டன்ஷிப் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தப்பித்துக்கொண்டே இருந்தார். நேற்று அஜீத் வெளியேறவேண்டியது தான். ஆனால், அனிதா ஆரியுடன் சண்டையிட்டு மக்கள் வெறுப்பை சம்பாதித்து ஓட்டில் பின்தங்கி வெளியேறிவிட ஆஜீத் தப்பித்துவிட்டார். இந்த வாரமும்இதே தான் வீட்டிற்குள் நடக்கிறது. ஆரியை நாமினேட் செய்து வெளியேற்ற முடியவில்லை என்ற கடுப்பில் ஷிவானியும் ரம்யாவும் அவரை பற்றி புறம் பேசுகின்றனர். ஆக இந்த வாரமும் வேற ஆடு தலையை கொடுத்து அஜீத்தை சேவ் பண்ணிடும் போலயே...