வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (14:38 IST)

நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த் ஆதரவு யாருக்கு ? – பாக்யராஜ் அணியின் ஸ்மார்ட் மூவ் !

நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணியினர் நடிகர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.


நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இதற்கிடையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.  இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அணியினர் மூத்த் நடிகர்களான ரஜினி, கமலிடம் ஏற்கனவே பேசி ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் இன்று முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை சந்தித்து அவரிடம் ஆதரவு கோரியுள்ள்னர். விஜயகாந்தை சந்தித்த பின் பேசிய பாக்யராஜ் ‘விஜயகாந்த் என் கைகளைப் பிடித்து கண்டிப்பாக நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் எனக் கூறினார். அடுத்து அஜித், விஜய் ஆகியோரையும் சந்தித்து ஆதரவுக் கோர இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.