புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (08:56 IST)

பாண்டவர் அணி எதிர்க்கட்சிகளின் அணியா ? – விஷால் விளக்கம் !

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக விஷால் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றிபெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான அணிக் களமிறங்கியிருக்கிறது.

நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணி சார்பில் நேற்றி விஷால் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் ’உங்கள் அணியில் திமுகவிலிருந்து பூச்சி முருகன், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கோவை சரளா, காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு ஆகியோர் உங்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சிகளின் அணி என உங்கள் அணியைக் கூறலாமா’ கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த விஷால் ‘எங்கள் அணியில் எல்லோரும் நடிகர், நடிகை என்ற உணர்வோடுதான் வந்துள்ளார்கள். எந்தக் கட்சியின் பிரதிநிதியாகவும் வரவில்லை. அதனால் எங்கள் அணிக்கு அரசியல் சாயம் பூசவேண்டாம்.’ எனக் கூறியுள்ளார்.