பீச்சில் நிக்கி கல்ரானியுடன் குத்தாட்டம் போட்ட விக்ரம்பிரபு
‘பக்கா’ படத்திற்காக பீச்சில் நிக்கி கல்ரானியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் விக்ரம்பிரபு.
விக்ரம்பிரபு, நிக்கி கல்ரானி இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ‘பக்கா’. எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ள இந்தப் படம், கிராமத்தில் உள்ள முக்கோணக் காதல் கதை. இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக பிந்து மாதவி நடித்துள்ளார். தோனி ரசிகர் மன்றத் தலைவராக விக்ரம்பிரபுவும், ரஜினி ரசிகர் மன்றத் தலைவியாக நிக்கி கல்ரானியும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள குத்துப்பாடல் ஒன்றை, மரக்காணம் அருகேயுள்ள சிறிய தீவில் படமாக்கியிருக்கிறார்கள். தினேஷ் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். விக்ரம்பிரபுவும், நிக்கி கல்ரானியும் செம குத்தாட்டம் போட்டிருக்கும் இந்தப் படம், ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும் என்கிறார் இயக்குநர்.