1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (17:12 IST)

விஜய், அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் – ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், விஜய் மற்றும் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

 


கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், சூதாட்டப் புகார் காரணமாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டார். எனவே, சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘டீம் 5’ என்ற படத்தில் பைக் ரேஸராக நடித்துள்ள ஸ்ரீசாந்த், இந்தப் படத்திற்காக ரேஸ் பைக் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தில், ஸ்ரீசாந்த் ஜோடியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார்.

“நான் சினிமாவில் நடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. என் தந்தையும், சகோதரியும் சினிமா நடிகர்கள். இது என்னுடைய மூன்றாவது படம். ஆனால், முதலில் ரிலீஸாகப் போகும் படம் இதுதான். சென்னையில் இருந்தபோது நிறைய தமிழ்ப் படங்கள் பார்த்துள்ளேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லை. நல்ல கேரக்டராக இருந்தால், ஒரு ஸீனில் நடிக்கக் கூட தயாராக இருக்கிறேன். கன்னடத்தில் வில்லனாக நடிக்கிறேன். அதேபோல், தமிழில் தல, தளபதிக்கு வில்லனாக நடிக்க வேண்டும்” என்கிறார் ஸ்ரீசாந்த்.