”உடம்பு தெரியுற மாதிரி வந்தா அப்படிதான் பேசுவேன்!” – ஷகிலாவுடன் பயில்வான் ரங்கநாதன் மோதல்!
தமிழ் சினிமாவில் நடிகராகவும், சினிமா செய்தியாளராகவும் இருந்து வரும் பயில்வான் ரங்கநாதன் தன்னை மூன்று நடிகைகள் காதலித்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளவர் பயில்வான் ரங்கநாதன். நடிகராக மட்டுமல்லாமல், சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் சேனல்களில் நடிகர், நடிகையர் குறித்து பேசி வரும் கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஷகிலா தொகுத்த பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பதில் அளித்தார். அப்போது ”பழைய நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை தற்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா?” என்று ஷகிலா கேட்க, அதற்கு பதில் சொன்ன பயில்வான் “பிரபலமாக இருந்தால் இதெல்லாம் இயல்பானதுதான்” என கூறியுள்ளார்.
மேலும் தனது இளமைக்காலம் குறித்து பேசிய பயில்வான், தன்னை மூன்று நடிகைகள் காதலித்ததாகவும் ஆனால் அவர் தன் பெற்றோர் சொன்ன பெண்ணை தனது 32 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவது குறித்து ஷகிலா கேள்வி எழுப்பவே, “உங்களை ஏன் மலையாள சினிமாவில் நடிக்க கூடாது என ஒதுக்கிவைத்தார்கள்?” என பயில்வான் ஷகிலாவை பதில் கேள்வி கேட்டுள்ளார். அப்படி எந்த விதமான தடையும் தனக்கு விதிக்கப்படவில்லை என ஷகிலா கூறியுள்ளார்.
Edit by Prasanth.K