ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (16:40 IST)

நிகழ்ச்சியில் மோதிக் கொண்ட பயில்வான் ரங்கநாதன் & தயாரிப்பாளர் கே ராஜன்!

சினிமா நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களைப் பேசி அதன் மூலம் யுட்யுப் சேனல்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். இவர் பேசும் கிசுகிசுக்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான செய்திகளுக்காக இவருக்கு ஒரு பெரிய பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அவர் மீது திரையுலகினரும் கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த பயில்வான் கோபமாகி ராஜனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் காரசாரமாகவும், அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.