’வர்மா’வை பார்த்தபின்னும் ‘பாலா’ படத்தில் நடிக்கின்றாரா உதயநிதி?
தேசிய விருது பெற்றவர் என்ற புகழைப் பெற்ற பாலாவின் சமீபகால படங்கள் அவருக்கு பெருமை ஏற்படுத்தும் வகையில் இல்லை. அந்த வகையில் அவர் இயக்கிய வர்மா திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாலா சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததாகவும் பாலாவின் அடுத்த படத்தில் உதயநிதி தான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’ஆர்டிகல் 15’ என்ற ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள உதயநிதி அந்த படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் நடிப்பாரா? அல்லது அதற்கு முன்னரே பாலா படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
இந்த நிலையில் வர்மா திரைப்படம் வெளியாகி பலரின் நெகட்டிவ் கமெண்ட்டுகளை பார்த்த பின்னரும் உதயநிதி, பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பது சந்தேகமே என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன