1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (23:41 IST)

ராம் கோபால் வர்மாவின் சர்ச்சையாகும் கஜினிகாந்த் புகைப்படம் !

இந்தியத் திரையுலகில் சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. பல முன்னணி நடிகர்களை அவர் வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்கியுள்ள ஆர்ஜிவி மிஸ்ஸிங் படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஆர்ஜிவி படத்தின் புதிய கஜினிகாந்த். இவரை பார்த்து வேறு யாராவது தெரிந்தால் அது முற்றிலும் தற்செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஜினியைக் குறிப்பிட்டு  ராம்கோபால் வர்மா பேசியுள்ளாரோ என்று அவரது ரசிகர்கள் கடும் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ராம்கோபால் வர்மா பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் மற்றும் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.