1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (18:38 IST)

அன்பையும், சகிப்புத் தன்மையையும் சோதிக்கும் "பாரம்" ஸ்னீக் பீக் காட்சி...!

கடந்த 2019ம் ஆண்டு சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் தேசிய விருது வென்ற படம் "பாரம்". நம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை வெளியாகியுள்ளது என்பதே இந்த அறிவிப்பு வந்த பிறகு தான் நம்மில் பலருக்கும் தெரியவந்தது.
 
பிரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடைசி காலத்தில் பெற்ற தந்தையை மகன் கவனித்து கொள்வதை எவ்வளவு சுமையாக கருதுகிறான் என்பதையே கருவாக வைத்து எடுத்துள்ளனர். மனைவியை இழந்த கருப்புசாமி சென்ற ஒரு நைட் வாட்ச் மேனின் வாழ்க்கையை படமாக்கியுள்ள இயக்குனர் இப்படத்தில் சமூகத்தின் அவலங்களையும் எதார்த்தமான உண்மைகளையும் உள்ளடக்கி உருவாகியுள்ளார். வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 
 
கிராமங்களில் வயதான முதியவர்களை பராமரிக்க முடியாமல் உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்காமல் வெறும் இளநீர் கொடுத்து கருணை கொலை செய்யும் கொடுமையை விவரிக்கும் படம் தான் பாரம். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு சிறந்த யதார்த்த படைப்பாக நிறைய வெற்றிகளை குவிக்கும் என்பதில் ஐய்யமில்லை .