செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2020 (10:51 IST)

கிடு கிடு வியாபாரம்....எல்லா இடங்களிலும் விற்றுத்தீர்ந்த "மாஸ்டர்"!

பிகில் பபடத்தை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.  மேலும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
 
ஆனால், தற்போது படம் வெளியாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே மாஸ்டர் படம் அனைத்து இடங்களிலும் விட்டு வியாபாரத்தில் லாபம் ஈட்டி வருகிறது. அந்தவகையில் தற்போது வெளிநாடு  உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் 2 நாட்களில் விற்றுத்தீர்ந்து விட்டன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.