1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 10 மே 2017 (14:39 IST)

பாகிஸ்தானில் களமிறங்கிய பாகுபலி 2: மக்கள் கொண்டாட்டம்

நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய திரைப்படம் பாகிஸ்தான் நாட்டில் வெளியாகியுள்ளது. பாகுபலி 2 பாகிஸ்தான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 

 
பாகிஸ்தான் நாட்டில் இந்திய திரைப்படங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இந்நிலையில் பாகுபலி 2 இந்தியில் டப் செய்யப்பட்டு கராச்சி, லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்திய திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் அமோக வெற்றிப்பெற்று வசூல் சாதனை படைத்த பாகுபலி 2 பாகிஸ்தான் நாட்டு மக்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில இடங்களில் படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.