திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (15:26 IST)

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் – இயக்குனர் சாச்சியின் சாய்ஸ் இவர்கள்தான்!

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் யார் எல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என அந்த படத்தின் இயக்குனர் சாச்சி தெரிவித்த்யுள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சச்சின் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய முடக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது ஹிட் படமான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கோஷியாக கார்த்தியும், அய்யப்பனாக பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரஹாமும், நானா படேகரும் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.