'அயோத்தி' பட இயக்குநரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்?
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மந்திர மூர்த்தி. இவர் இயக்கத்தில் சசிக்குமார். யாஷ்பால் சர்மா, அனுஜ் அஷ்ராணி, தமன் குமார், புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி வெளியான படம் அயோத்தி.
இப்படம் அனைவரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது. இப்படமும் வெற்றி பெற்றதுடம் இப்படத்தை இயக்கின இயக்குனர் மந்திர ராமமூர்த்தி, மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்தது.
எனவே இயக்குனர் மந்திர ராமமூர்த்தியின் அடுத்த படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அவரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தில் தன் ஒவ்வொரு படத்திலும் தனக்குண்டான டான்ஸ் மற்றும் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லாததால் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை என ஒரு தகவல் வெளியாகிறது.
இப்படத்தின் மூலம் நடிகர் ராகவா லாரன்ஸை புதிய பரிமாணத்தில் பார்க்க நினைத்த ரசிகர்கல் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.