திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (08:14 IST)

அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் ஒருவர் அஸ்வின் என்பதும் அவர் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ’எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் அன்பை நம்பி’ என்று பதிவு செய்துள்ளார் 
 
‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
அஸ்வின் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்-மெர்வின் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் ரவீந்திரன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது