தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் தினமாக மாறிய ஜனவரி 26

Last Modified திங்கள், 21 ஜனவரி 2019 (19:43 IST)
ஜனவரி 26 அன்று நாடே குடியரசு தின விழாவை கொண்டாடும் நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு அதே நாள் ஒரு சிறப்பு தினமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' ஆகிய படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் 'அசுரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'வடசென்னை' படத்தை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26ஆம் தேதி தொடங்கும் என்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைதி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :