புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (18:02 IST)

'அசுரன்' படத்திற்காக பக்கா ரிலீஸ் தேதியை முடிவு செய்த தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விடும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னொரு பக்கம் நடைபெற்று வருவதால் இந்த படத்தின் அனைத்து பணிகளும் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் 'அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அதனை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. எனவே நீண்ட விடுமுறை இடைவெளி கொண்ட ஒரு பக்கா நாளில் ரிலீஸ் தேதியை தனுஷ் தந்து 'அசுரன்' படத்திற்காக ஒதுக்கியுள்ளது அவரது புத்திசாலித்தனத்தை காட்டி உள்ளதாக கோலிவுட் திரையுலகினர் கூறிவருகின்றனர்
 
தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வரும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.  ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.