1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (10:47 IST)

தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஷிவாங்கி - வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவரான ஷிவாங்கி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.   
 
அதில் அஷ்வின் மீதுள்ள Crush தான் அவரை அனைவருக்கும் பிடிக்க காரணமாக இருந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ஷிவாங்கி தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். கவின் நடித்துள்ள  அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடல் யூடியூபில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இதில் ஷிவாங்கி கியூட்டான எக்ஸ்பிரசன்ஸ் கொடுத்து fun செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...