1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (08:29 IST)

புறக்கணிப்பு எல்லா மட்டங்களிலும் நடக்கிறது – தமிழ் நடிகர் பகீர் குற்றச்சாட்டு!

சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி பேச்சு எழுந்துள்ள நிலையில் தமிழ் நடிகரான அஸ்வின் தான் எதிர்கொண்ட சம்பவங்களைப் பற்றி பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை கடந்த ஒரு வாரமாக சினிமாவில் நிகழும் வாரிசு அரசியலை பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாமல் வருபவர்களை அவுட்சைடர்ஸ் என ஓரம்கட்டும் வழக்கத்தைப் பற்றி பல நடிகர்களும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகரான அபய் தியோல் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் தான் பாரபட்சமாக நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார். அதைப் பகிர்ந்த தமிழ் நடிகரான அஸ்வின் கக்குமானு ‘ஒருவரை ஓரம் கட்டுவதோ அல்லது அற்பமாக நடத்துவதோ எல்லா மட்டங்களிலும் நடப்பதை அறிகிறேன். வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணிக்கும் சுத்தியல் தேவைப்படுகிறது. என்னைப் புறக்கணிக்க நினைக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. ’ எனக் கூறியுள்ளார்.