திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (23:02 IST)

சுஷாந்த் ரசிகர்களின் எண்ணத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்துப் புகழ்பெற்ற அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் அவர் நடித்துள்ள கடைசிப் படமான தில் பேச்சாரா (Dil Bechara ) விரையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுஷாந்தின் ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஸ்டேக்கை பயன்படுதி டுவிட்டரின் டிரெண்ட் ஆக்கினர்.

ரசிகர்கள் உருவாக்கிய அந்த ஹேஸ்டேக்கை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.