திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (08:30 IST)

கொரோனா அறிகுறி இருக்கு… ஆனால் சோதனை செய்யக்கூட காசு இல்ல – புலம்பும் நடிகை!

பாலிவுட் நடிகையான பூஜா தட்வால் கொரோனா அறிகுறி இருப்பதாகவும், ஆனால் அதற்கான சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவிப்பதாகவும் வடநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலிவுட் நடிகையான பூஜா தட்வால் சல்மான் கானோடு வீரகடி என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் துறையைவிட்டு வெளியேறினார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதகாவும் ஆனால் சிகிச்சைக்குக் கூட பணம் இல்லாமல் அவர் தவிப்பதாகவும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபற்றி அவரிடம் நேர்காணல் செய்துள்ள இணைய ஊடகம் ஒன்று ‘சல்மான் எனக்குப் பலமுறை உதவி செய்திருக்கிறார். ஆனால் அவரிடமே பணம் கேட்க கஷடமாக உள்ளது. ஆனால் இம்முறையும் அவர் உதவி செய்வார் என நம்புகிறேன்’ என அவர் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.