என்ன வெச்சு இவ்ளோ நடந்துச்சா? – அதிர்ச்சியில் அசல் கோளாறு!
பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட அசல் கோளாறு எலிமினேஷன் ஆகி வெளியேறிய நிலையில் தன்னை பற்றி வெளியான வீடியோக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் அசீம், ஆயிஷா, ஜிபி முத்து, அசல் கோளாறு என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் கடந்த வார எலிமினேஷன் ரவுண்டில் பாடகர் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார். அப்போதும் கூட தன்னை ஏன் மக்கள் வெளியேற்றினார்கள் என்று புரியவில்லை என்று கமல்ஹாசனிடம் கூறினார் அசல். அதற்கு கமல் வெளியே சென்று விசாரியுங்கள் புரியும் என சூசகமாக சொல்லி அனுப்பினார்.
அசல் பிக்பாஸ் வீட்டில் இருந்த பெண்களிடம் நடந்து கொண்ட விதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதுகுறித்த ட்ரோல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது.
அதை பார்த்த அசல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும்போது ஒன்னும் தெரியல. இங்க வந்து பாக்கும்போதுதான் தெரிஞ்சது. என்னை இப்படியெல்லாம் ட்ரோல் பண்ணியிருக்காங்கன்னு. சோசியல் மீடியாவ ஒன்னும் பண்ண முடியாது. நான் தவறான எண்ணத்துல அப்படி பண்ணல. இதை கடந்து போக முயற்சி பண்ணுவேன்” என கூறியுள்ளார்.
Edited By Prasanth.K