1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (17:30 IST)

நான் உங்களை விமர்சனம் செய்யவில்லை, கண்டிக்கின்றேன்: அசீமுக்கு கமல் எச்சரிக்கை

kamal biggboss
நான் உங்களை விமர்சனம் செய்யவில்லை, கண்டிக்கின்றேன்: அசீமுக்கு கமல் எச்சரிக்கை
நான் உங்களை விமர்சனம் செய்யவில்லை கண்டிக்கிறேன் என கமல்ஹாசன் அசீமை எச்சரித்த வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்த அசீம் சக போட்டியாளர்களிடம்  கேலியும் கிண்டலுமாக அநாகரிகமாகவும் பெண் போட்டியாளர்களிடம் தரக்குறைவாகவும் நடந்து வருகிறார். குறிப்பாக அவர் ஆயிஷாவை போடி வாடி என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு ரெட் கார்ட் என்ற நாடகத்தை நடத்தி கமல் மிதமான எச்சரிக்கையும் விடுத்ஹ்ட நிலையில் அவருடைய அட்டகாசம் மீண்டும் தொடர்ந்து வருவதை அடுத்து இந்த வாரம் கமல்ஹாசன் அசீமை நேரடியாகவே கண்டித்துள்ளார்.
 
உங்களை நான் விமர்சனம் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள், உங்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் உங்கள் மகனுக்காக! உங்களுடைய விளையாட்டு தரம் இதுதான் என்றால் நானும் மற்ற போட்டியாளர்களிடம் உங்களை பற்றி கூறி விடுகிறேன். மக்கள் உங்களை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வார்கள் என்று ஆத்திரத்துடன் கூறினார். கமல்ஹாசனின் இந்த ஆத்திரம் அசீமை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிகிறது.
 
Edited by Mahendran