திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:42 IST)

பாக்யராஜ் மகனுக்காக இணையும் ஆர்யா-ஐஸ்வர்யா ராஜேஷ்!

பாக்யராஜ் மகனுக்காக இணையும் ஆர்யா-ஐஸ்வர்யா ராஜேஷ்!
பாக்யராஜ் மகன் சாந்தனு மற்றும் அவரது மனைவிக்கு கிகிவிஜய் ஆகிய இருவரும் ஒரு ஆல்பத்தில் நடித்து வருகிறார்கள் என்றும் இந்த ஆல்பத்தின் டைட்டில் ‘எங்க போற டீ’ என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது என்பது தெரிந்ததே
 
இந்த ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஆல்பத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆல்பத்தின் டீசரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று முன் வெளியிட்ட இந்த டீசர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தில் உள்ள பாடலை சாந்தனு பாக்யராஜ் பாடியுள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது