விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அருண் விஜய் கருத்து
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் விஜய். இவர் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் யானை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் நடித்து வரும் மிஷன் என்ற படம் விரைவில் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த அதே கேரக்டரில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம் முன்பு அண்ண்ணாமலையாரை வணங்கி, கோயிலை ஒட்டிய 14 கிமீ மலையை சுற்றி நேற்று நள்ளிரவு தன் ரசிகர்களுடன் கிரிவலம் வந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருவண்ணாமலை அண்ணாமலையாரை பார்க்கும்போது ஒரு மன நிம்மதியும் தெளிவும் ஏற்படுகிறது. இது ஒரு காரணம் கிடையாது., நேரம் வரும்போது, எனக்கு தோன்றும் போது இங்கு வருவேன். இங்கு நேற்றிரவு கிரிவலம் வந்தேன். என் ரசிகர்களும் உடன் வந்தனர். என் அடுத்த படம் ஏ.எல்.விஜயுடன் நடந்து வருகிறது. பாலாவின் வணங்கான் படத்திற்கு மீண்டும் இங்கு வரவேண்டி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறினார்.
திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இது நல்ல விஷயம் தானே. புதிய ஆட்கள் அரசியலுக்கு வரவேண்டியது மக்கள் விருப்பம் என்றார்.
விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவரிடம் கேட்டதற்கு, நல்ல விஷயம், அவர் முதலில் அறிவிக்கட்டும். அதை வரவேற்போம்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் நான் இப்போதைக்கு கூறமுடியாது. நிறைய நல்ல பணிகள் ரசிகர் மன்றம் மூலம் செய்யவிருக்கிறேன் என்று கூறினார்.