பழநி கோயில் நுழைவு விவகாரம்: மேல்முறையீடு செய்கிறதா தமிழக அரசு?
பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களிலும் அனைவரும் சென்று அமைதியாக வழிபட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த தீர்ப்பு 1947 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கோயில் நுழைவு சட்டவிதிக்கு எதிராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Siva